சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5. 00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து 5. 50 மணிக்கு வழமை போல் காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும். அதுபோல பி. ப 6. 20 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று முதல (24) இலங்கை போக்குவரத்து சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி.
https://www.telonews.com/?p=145480
